செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும் ; எந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா?
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். தற்போது செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷ ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் ஜூன் 16 ஆம் திகதி செவ்வாய் ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். அதோடு கிருத்திகை நட்சத்திரத்திற்குள்ளும் பயணிக்கவுள்ளார் குறிப்பாக 4 ராசிக்காரர்கள் செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல நிதி ஆதாயங்களையும், தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், ஒவ்வொரு வேலைகளிலும் வெற்றிகளை காணவுள்ளனர். இப்போது செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைகுகு வந்து சேரும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் தலைமைத்துவ திறன்கள் பாராட்டப்படும். சிலருக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். உங்களின் பேச்சு இக்காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் பல முக்கியமான வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். முக்கியமாக இக்காலத்தில் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைக் காண்பீர்கள்.

சிம்மம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக நடந்து முடியும். சமூகத்திலும், பணியிடத்திலும் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளுடனான உறவு மேம்படும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்வில் நேர்மறையான பலன்களைப் பெறுவார்கள். தன்னம்பிக்கை இரட்டிப்பாகும். எப்பேற்பட்ட கடினமான வேலைகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

தனுசு
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணியிடத்தில் மற்றும் தொழிலில் எதிரிகளை அசால்ட்டாக வீழ்த்தி வெற்றி காண்பார்கள். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வரும். கடின உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும். நாள்பட்ட நோய்கள் நீங்கி, உடல் நலம் மேம்படும். மொத்தத்தில் இக்காலம் பொற்காலமாக இருக்கும்.
