இலங்கையில் இடம்பெற்ற இரு பயங்கர விபத்து... துரதிஷ்டவசமாக உயிரிழந்த 2 இளைஞர்கள்
செவனகல மற்றும் பனமுர பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற வெவ்வேறு வீதி விபத்துக்களில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (09-11-2024) இடம்பெற்றுள்ளது.

செவனகல - திவுல்கஸ் சந்தி வீதியில் பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதியதில் 17 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
திவுல்கஸ் சந்தி நோக்கி பயணித்த பேருந்து ஒன்று கமுனுபுரவிலிருந்து லக்சிரிகம நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றும் சாரதி இருவரும் படுகாயமடைந்ததுடன், படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி செவனகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, முலேந்தியாவல - மலபலாவ வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கை உழவு இயந்திரத்தின் ட்ரெய்லருடன் மோதி விபத்துகுள்ளானது.

குறித்த விபத்தில் பிலிபிட்டிய, முலேந்தியாவல பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.