விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் தாயாரிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணை!
மே 18ஆம் திகதிக்கு பின்னர் கூட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எங்கே என்ற விசாரணையை தன்னிடமும், பிரபாகரனின் தந்தையிடமும் நடத்தியதாக பிரபாகரனின் தாயார் தன்னிடம் கூறினார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
ஊடக நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறினார்.
இதன்போது தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் தலைவர் பொட்டம்மானுடைய பூதவுடலும் கைப்பற்றப்படவில்லை, எதுவுமே கைப்பற்றப்படவில்லை.
ஆனால் அவருடைய இறப்பு பற்றி அல்லது அவர் இறந்ததாக சொல்லப்படுகின்ற விடயத்தை அன்றைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பத்திரிகைகளுக்கு, “அவருடைய உடல் கிடைக்கவில்லை. அவர் கொல்லப்பட்டு விட்டார் என்று நூறு வீதம் உறுதிப்படுத்தியிருக்கிறோம்” என தெரிவித்திருந்ததையும் எம்.கே.சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார்.
தொடர்புடைய செய்தி