கோட்டாவை பிரதமராக்க தீவிர முயற்சி!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்குள் அழைத்து வர மொட்டின் ஒரு குழுவினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக தெரியவருகின்றது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து வெடித்த மக்கள் புரட்சியால் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை துறந்தார்.
ரகசியமாக வெளியேற்றம்
நாட்டிலிருந்து ரகசியமாக வெளியேறிய கோட்டாபய வெளிநாட்டுக்கு சென்று அங்கிருந்தே தனது இராஜினாமாக் கடிதத்தை அனுப்பினார்.
அதன்பின்னர் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமங்க தேர்வுசெய்யப்பட்டு பதவியேற்றது மக்கள் போராடங்கள் ஒடுக்கப்பட்டது.
அதன்பின்னரே கோட்டாபய நாடுக்கு திரும்பியிருந்தார். இந்நிலையிலேயே கோட்டாவை பிரதமராக்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
இதற்காக அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்கு மொட்டு கட்சி எம்.பிக்கள் சிலர் முற்படுகின்றதாகவும் அரசியல் வட்டார தகவல்கள் கூறுகின்றன.