கழிவறைக்கு சென்றவரை வரவேற்ற கருநாகம்; அலறியடித்து ஓட்டம்!
இந்தியாவில் ராஜஸ்தானில் சுற்றுலாப் பயணி புக் செய்திருந்த ஓட்டல் கழிவறையில் ஐந்து அடி கடும் விஷம் நிறைந்த கரு நாகம் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள பிரபல யாத்திரை நகரமான புஷ்கருக்கு ஒரு குடும்பத்தினர் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் அங்கிருந்த ஒரு ஓட்டலில் தங்குவதற்காக அறையை வாடகைக்கு எடுத்தனர்.
அலறியடித்து ஓட்டம்
அவர்கள் வாடகைக்கு எடுத்த அறை அந்த ஓட்டலின் இரண்டாவது மாடியில் இருந்தது. இந்நிலையில் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர் அறையின் கழிவறையைப் பயன்படுத்த உள்ளே சென்றபோது, சுமார் ஐந்து அடி நீளமுள்ள கடும் விஷம் நிறைந்த கரு நாகம் ஒன்று அந்தக் கழிவறையினுள் இருந்து சீறியுள்ளது.
இதனைப் பார்த்துப் பதறிய அந்த நபர் உடனடியாக, கதவை மூடிவிட்டு, ஓட்டல் ஊழியர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
टॉयलेट के कमोड में घुसा #Cobra सांप, परिवार आया दहशत में
— Rahul Chauhan (@journorahull) September 20, 2025
अजमेर के ज्ञान विहार इलाके में उस समय हड़कंप मच गया जब एक घर की दूसरी मंजिल के टॉयलेट में एक कोबरा सांप जा घुसा।
सांप को कमोड में कुंडली मारे बैठे देख घरवाले दहशत में आ गए।
इस अप्रत्याशित और खौफनाक दृश्य को देखते ही घर… pic.twitter.com/B1RbJtUVk1
ஓட்டல் ஊழியர்கள், உடனடியாகப் பாம்பு பிடிப்பவர்களுக்குத் தகவல் கொடுத்ததனைத் தொடர்ந்து அந்த ஓட்டலுக்கு விரைந்து வந்த பாம்பு பிடிப்பவர்கள், கழிவறையைத் திறந்து பார்த்தனர்.
அப்போது, கழிவறைக்குள் இருந்த அந்தக் கரு நாகம் மிகவும் ஆக்ரோஷத்துடன் சீறியபடியே இருந்தது. துரிதமாகச் செயல்பட்ட பாம்பு பிடிக்கும் நபர்கள், ஆக்ரோஷத்துடன் சீறிய அந்தப் பாம்பை லாவகமாகப் பிடித்து அருகில் இருந்த வனப்பகுதியில் விட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்தக் கரு நாகம் ஆக்ரோஷத்துடன் சீறிய வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.