பணமோசடியில் இலங்கை நடிகையை விடுவிக்க மறுத்த நீதிமன்றம்!
இலங்கையைச் சேர்ந்த பிரபல பொலிவூட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இந்திய உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான வழக்கில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி ஜாக்குலின் பெர்னாண்டஸ் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையிலேயே இந்திய உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதேவேளை முன்னதாக குறித்த வழக்கு தொடர்பில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தாக்கல் செய்த மனுவை டெல்லி மேல்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இதனையடுத்தே நடிகை ஜாக்குலின் உயர் நீதிமன்றில் மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் டெல்லி மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தமக்கு தலையிட முடியாது என்றும் இது போன்ற நிவாரணம் பெற இது சரியான நேரம் அல்ல என்றும் இந்திய உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.