தாறுமாறாக எகிறும் தங்கம் விலை; நகை பிரியர்கள் ஷாக்!
உலகில் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில் சாமானிய மக்கள் தங்கம் வாங்குவது கனவாக மாறி போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து அதிரடியாக உயர்ந்து வரும் தங்கம் விலை இன்றும் (30) புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
எகிறும் தங்கம் விலை
அந்த வகையில் சென்னையில் நேற்று செப்டம்பர் 29ஆம் தேதி ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை உயர்ந்துள்ளது.
காலையில், 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,700க்கும் சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மாலையில், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,770க்கும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,160க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று செப்டம்பர் 30ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,860க்கும் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,990க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் 161 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,61,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.