மனைவியால் சிறைக்கு சென்ற பொலிஸ்மா அதிபர் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதையல் தோண்ட முற்பட்ட சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 9 பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் இன்று (08) ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்களை எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் மேலதிக நீதவான் நாலக்க சஞ்சீவ ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகிலுள்ள காணியில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.