முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதம் ரத்து;உயர் நீதிமன்றின் தீர்மானம்
இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது.
இன்றைய சபை அமர்வின் ஆரம்பித்தில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரட்ன உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை அறிவித்தார்.
சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும்
இதன்படி குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் இன்று அறிவித்தார்.
அதேவேளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்துக்கு அமைவாக முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்துச் செய்யும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தும் வகையில் பொதுஜன பெரமுன கட்சியின் நிர்வாகச் செயலாளர் ரேணுக பெரேரா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.