பெண் எம்எல்ஏ விடம் பொது இடத்தில் அத்து மீறிய மூத்த தலைவர்; வலுக்கட்டாயமாக அணைக்க முயற்சி
கேரள சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான உற்சாகத்தில் காங்கிரஸ் தலைமையகத்திற்கு வந்த கொல்லம் தொகுதி எம்எல்ஏ பிந்து கிருஷ்ணாவிடம், அக்கட்சியின் மூத்த தலைவர் செரியன் பிலிப் அநாகரிகமாக நடந்துகொண்ட காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரள சட்டப்பேரவை தேர்தலில் கொல்லம் தொகுதியில் இருந்து 16,830 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் பிந்து கிருஷ்ணா, திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திற்கு நேற்று (மே 8) சென்றுள்ளார்.

செரியன் பிலிப்பின் செயலுக்குப் பலரும் கண்டனம்
இதன்போது அங்கு கூடியிருந்த கட்சித் தலைவர்கள் அவருக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அங்கு வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் செரியன் பிலிப், பிந்து கிருஷ்ணா கைகொடுக்க முன்வந்தபோது, அதை மறுத்து அவரை வலுக்கட்டாயமாகக் கட்டிப்பிடிக்க முயன்றார்.
பிந்து கிருஷ்ணா தனது கைகளைத் தடுத்து விலகிச் செல்ல முயன்றபோதும், செரியன் பிலிப் அவரது தோளில் கைபோட்டு அணைக்க முயன்றார்.
A video from the Kerala Pradesh Congress Committee headquarters in Thiruvananthapuram has gone viral after Cherian Philip allegedly attempted to hug newly elected Kollam MLA Adv. Bindu Krishna despite her apparent reluctance during a legislative party meeting.
— Hate Detector 🔍 (@HateDetectors) May 7, 2026
The viral video… pic.twitter.com/UhURpa80Qz
இதனால் மிகுந்த அசவுகரியத்திற்கு உள்ளான பிந்து கிருஷ்ணா, உடனடியாக அவரது கைகளைத் தட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, செரியன் பிலிப்பின் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.