தவெகவுக்கு இரு கட்சிகள் ஆதரவு ; விஜய் விரைவில் அரியணை ஏறுவார் என எதிர்பார்ப்பு !
இரண்டாம் இணைப்பு
ஆட்சியமைக்க இன்னும் இரண்டு ஆதரவு ....
தவெக ஆட்சியமைக்க தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. இன்று ஆலோசனை நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தவெக ஆட்சியமைப்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தவெகவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. இரு கட்சிகளுமே ஆதரவுக் கடிதங்களை அளித்துள்ளன.
இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்த காரணத்தால் தவெகவின் ஆதரவு 116 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், தவெக ஆட்சியமைக்க மேலும் 2 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை. இந்தச் சூழலில், 2 உறுப்பினர்களை கொண்ட விசிக இன்று மாலை தங்களின் முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளது.
இந்த நிலையில் சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று நன்றி தெரிவிக்க உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கும் விஜய் சென்று நன்றி தெரிவிப்பார் என கூறப்படுகிறது
முதலாம் இணைப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி கடிதம் கடிதம் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து தவெகவுக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு 114 ஆக அதிகரித்துள்ளது.
தவெக ஆட்சி அமைக்க இன்னும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவையே உள்ளது. அதேசமயம் மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விஜய்க்கு தமது ஆதரவை சிறிது நேரத்தில் அறிவிக்க உள்ளதாகவும் இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.

ஆட்சியமைக்க இன்னும் 4 உறுப்பினர்களின் ஆதரவு தேவை
இதற்கான ஆதரவு கடிதத்தை தவெக எம்எல்ஏ சிடிஆர்.நிர்மல்குமாரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வழங்கினார்.
அதேவேளை தவெக ஆட்சியமைக்க இன்னும் 4 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. மார்க்சிஸ்ட் மற்றும் விசிக கட்சிகள் இன்று மாலை தங்களின் முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளன.
இந்நிலையில் , விரைவில் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்கபார்க்கப்படுகின்றது.