ஒன்லைன் ஊடாக நிர்வாண புகைப்படங்களை விற்பனை செய்த இருவருக்கு நேர்ந்த கதி!
நாட்டில் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை ஒன்லைனில் ஊடாக விற்பனை செய்து பணம் வசூலித்த இர்ண்டு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்றையதினம் (26-10-2023) ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.
கைதான சந்தேகநபர்கள் இருவரும் 18 மற்றும் 19 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையவில்லை என விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.