தமிழ்நாட்டின் ஆட்சி யார் வசம்? ஆரம்பமாகவுள்ள வாக்கெண்ணும் பணிகள் ; விடுதியில் பாதுகாக்கப்படும் TVK வேட்பாளர்கள்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் (ஏப்ரல்) 23ஆம் திகதி இடம்பெற்றது.தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது.
234 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் பணிகள்
வாக்கு எண்ணும் பணிகள் காலை 8 மணிக்கு அஞ்சல் மூல வாக்கு எண்ணிக்கையுடன் தொடங்கும், அதைத்தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் 18,000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன் 40க்கும் மேற்பட்ட துணை இராணுவ படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும், தேர்தல் முடிவுகளை https://tnelections2026.in/results.html என்ற இணையதளத்திலும் பார்வையிட முடியும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள்..? மக்கள் தீர்ப்பு என்ன..? என்பது தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும்நிலையில், குறித்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனைப்போட்டி நிலவியது.
இந்நிலையில் இன்று வெளியாகும் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தனது கட்சி எம்.எல்.ஏக்களை பாதுகாக்க மாமல்லபுரத்தில் ஏற்பாடுகளை த.வெ.க. செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
பெரும் துயரை ஏற்படுத்திய ஆசிரியையின் மரணம் ; இரவு வீட்டிலிருந்து வெளியேறியவருக்கு நிகழ்ந்த அசம்பாவிதம் ; மேலதிக விபரம்
இந்நிலையில், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் விடுதியை த.வெ.கவினர் தயார் செய்து வைத்துள்ள தகவல் கசிந்துள்ளது. வெற்றி பெறும் வேட்பாளர்களை அங்கு தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.