இந்த திகதிகளில் பிறந்தவர்களே நல்ல தலைவர்களாக இருப்பார்களாம் ; இதையும் பாத்துக்கோங்க
தலைவராக இருப்பதற்கு யார் வேண்டுமென்றாலும் ஆசைப்படலாம், ஆனால் நல்ல தலைவராக மாறுவதற்கு சில குணங்களும், தகுதிகளும் இருக்க வேண்டும். ஒருவரின் தலைமைத்துவத்தை நிர்ணயிப்பதில் அவர்களின் பிறந்த திகதி முக்கியப்பங்கு வகிக்கும் என்று எண் கணிதம் கூறுகிறது.
எண் கணிதத்தில், தலைமைத்துவம் என்பது ஒருவரின் முழுமையான பிறந்த திகதியிலிருந்து கணக்கிடப்படும் வாழ்க்கைப் பாதை எண்ணுடன் பிணைக்கப்பட்டுள்ளது. ஒரு இயற்கையான தலைவர் அதிகாரத்தைத் தேடிச் செல்வதில்லை, அதுவே அவர்களைத் தேடிவரும்.

எந்தெந்த திகதிகள்
சில எண்களில் பிறந்தவர்கள் மற்ற எண்களை விட இந்தக் குணங்களை வலுவாகக் கொண்டுள்ளார்கள். அவர்கள் எந்தெந்த திகதிகளில் பிறந்தவர்கள் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
எண் 1 : அனைத்து மாதத்திலும் 1, 10, 19, அல்லது 28 ஆம் திகதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கைப்பாதை எண் 1 ஆகும். அவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள் மற்றும் புதிய விஷயங்களில் துணிச்சலாக முடிவெடுப்பார்கள். சுதந்திரம் என்பது அவர்களின் பிரதான குணமாகும். வலுவான மன உறுதி, தன்னம்பிக்கை, தனித்துவம் மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவை அவர்களின் மற்ற பிரதான குணங்களாகும். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புதிய யோசனைகளைத் தொடங்குவதை விரும்புகிறார்கள் மற்றும் தங்களுக்கான சொந்தப் பாதையை உருவாக்குகிறார்கள். அவர்களின் தன்னம்பிக்கை, தலைமை தாங்குவதற்கு அவர்களை இயல்பான முதல் தேர்வாக ஆக்குகிறது.
பெரும் துயரை ஏற்படுத்திய ஆசிரியையின் மரணம் ; இரவு வீட்டிலிருந்து வெளியேறியவருக்கு நிகழ்ந்த அசம்பாவிதம் ; மேலதிக விபரம்
எண் 3 : அனைத்து மாதத்திலும் 3, 12, 21 அல்லது 30 போன்ற பிறந்த திகதிகளின் பிறந்தவர்களின் வாழ்க்கைப் பாதை எண் 3 ஆகும். அவர்கள் தங்களின் படைப்பாற்றலால் மற்றவர்களுக்கு உத்வேகம் அளித்து, பேசி, கற்பித்து, அவர்களை மேம்படுத்துவதன் மூலம் வழிநடத்துகிறார்கள். அவர்கள் சிறந்த பேச்சாளர்களாகவும் , மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கப்பவர்களாகவும் மற்றும் மகிழ்ச்சியானவர்களாகவும், மேலும் வேடிக்கையையும் பொறுப்பையும் சமநிலைப்படுத்தக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். தங்களின் நேர்மறையான ஆளுமை மற்றும் வெளிப்படையான குணம் காரணமாக, அவர்கள் பெரும்பாலும் சிறந்த வழிகாட்டிகளாகவும், வார்த்தைகளால் மற்றவர்களிடம் செல்வாக்கு செலுத்துபவர்களாகவும் மாறுகிறார்கள்.
எண் 8 : அனைத்து மாதத்திலும் 8, 17 அல்லது 26 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள், வாழ்க்கைப்பாதை எண் 8 கொண்டவர்களாக விளங்குகிறார்கள். திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் நீண்டகால உத்திகளை வகுத்தல் ஆகியவற்றிலேயே அவர்களின் பலம் அடங்கியுள்ளது. தீவிர ஒழுக்கம், நடைமுறை சார்ந்த கண்ணோட்டம், தொலைநோக்குச் சிந்தனை மற்றும் வலுவான நிர்வாகத் திறன்கள் ஆகியவை இவர்களின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களாகும். இவர்கள் மன உறுதியிடனும், கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையுடனும் விளங்குவதுடன், நெருக்கடியான சூழ்நிலையிலும் அமைதியை கடைபிடிப்பவர்களாக இருப்பார்கள். அவர்களின் தலைமைத்துவம் யதார்த்தமானதாகவும், நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கும்.