மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்பனை
கண்டி நகரத்தில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கினிகத்தேன பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கண்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் நேற்று (25) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கண்டி தெஹியம்வல பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மற்றுமொரு நாவலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் அம்பகமுவ பிரதேசத்தில் வைத்து நுவரெலியா பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்களிடமிருந்து 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 240 கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.