ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாரிய உயிராபத்து
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு நோய் நிலைமை அதிகரித்துள்ளதால் பாரிய உயிராபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவரை பிணையில் விடுதலை செய்யுமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
பாரதூரமான நோய் நிலைமை
இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குற்றப்புலனாய்வுத் பிரிவிலிருந்து சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் ஆஜரானார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் ஜனாதிபதி சட்டதரணிகளான திலக் மாரப்பன, அனுஜ பிரேமரத்ன, உப்புல் ஜயசூரிய மற்றும் அலி சப்ரி ஆகியோர் ஆஜராகியுள்ளனர்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய உடல்நிலைமைகள் தொடர்பில் நீதிமன்றில் வெளிப்படுத்திய ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாரதூரமான நோய் நிலைமையால் உயிராபத்துள்ளது.
இதனால் பாரதூரமான உயிராபத்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்த நிலைமை வழமைக்கு மாறான அப்பாற்பட்டுள்ளதாகவும் அவருக்கு அனைத்து நோய்களும் இருப்பதாகவும் சட்டத்தரணி மன்றில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இதனை கருத்தில் கொண்டு ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.