அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை; 10 இலட்சம் ரூபாய்
அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்தமைக்காக விடுமுறை விடுதி மற்றும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு எதிராக 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சோதனைகளை நடத்திய பின் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை வழக்குத் தாக்கல்
அதன்படி பெலிஹுல்ஓயா மற்றும் பண்டாரவளை பகுதிகளில் உள்ள ஒரு விடுமுறை விடுதி மற்றும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
100 ரூபாய் விலையில் விற்கப்பட வேண்டிய ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலை 400 ரூபாய்க்கு விற்ற குற்றச்சாட்டில் பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட விடுமுறை விடுதிக்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளது.
அத்தோடு, பண்டாரவளை எல்ல பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் 70 ரூபாய் விலையில் விற்கப்பட வேண்டிய 500 மில்லி லிற்றர் குடிநீர் பாட்டிலை 230 ரூபாய்க்கு விற்பனை செய்தமைக்காக நுகர்வோர் விவகார அதிகாரசபை வழக்குத் தாக்கல் செய்துள்ளது
மேலும், பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு 10 இலட்சம் ரூபாஅபராதம் விதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.