ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் இந்திய பிரபலங்கள் ; ஷாக் கொடுத்த தகவல்!
பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி சிறையிலேயே மரணமடைந்த கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரம் அமெரிக்காவை மட்டுமல்லாது தற்போது உலகெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது.
எப்ஸ்டீன் தனது மர்மத் தீவான லிட்டில் செயின்ட் ஜேம்ஸிற்கு (Little St. James) உலகப் பணக்காரர்களையும், அதிகார வர்க்கத்தையும் வரவழைத்துப் பாலியல் ரீதியாக அவர்களைச் சமரசம் செய்துகொண்டார் என்ற புகார்கள் நிலவுகின்றன.

இந்திய பிரபலங்களின் பெயர்கள்
ஜெப்ரி எப்ஸ்டீன் பட்டியலில் இந்திய பிரபலங்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக வெளிவருவது, இந்திய உயர்மட்ட சமூக வட்டாரங்களில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஆன்மீக குருவின் பெயர் இதில் அடிபடுவது சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுகின்றன.
ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரம் என்பது வெறும் பாலியல் குற்றம் மட்டுமல்ல, அது அதிகார வர்க்கத்தின் கோர முகத்தையும், உளவுத்துறை மற்றும் சர்வதேசச் சதிகளின் பின்னணியையும் கொண்டது என்பது இப்போது மீண்டும் உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் வரும் நாட்களில், எப்ஸ்டீன் ஃபைல்ஸில் உள்ள இன்னும் பல "இந்திய ரகசியங்கள்" வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த விவகாரம் இந்திய இணையதளங்களில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.
பாலியல் கடத்தல் புகாரில் கைதாகி விசாரணையை எதிர்கொண்டிருந்த ஜெப்ரி எப்ஸ்டீன், 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் திகதி நியூயோர்க் சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.
சிறையிலேயே மரணமடைந்த கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பில் மில்லியன் கணக்கான ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை அண்மையில் வெளியிட்டிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான ஆயிரக்கணக்கான ஆவணங்களை இணைய தளங்களில் இருந்து அமெரிக்கா நீக்கியுள்ளது.