கொழும்பு அடுக்குமாடியில் இருந்து சிறுவனின் தலை மீது விழுந்த சீமெந்து கலவை
கொழும்பு - முகத்துவாரம் ஹெலமுத்து செவன அடுக்குமாடியில் இருந்து சீமெந்து கலவை உடைந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முகத்துவாரத்திலுள்ள ஹெலமுத்து செவன தொடர்மாடி குடியிருப்பின் 07ஆவது மாடியின் 02 வீடுகளுக்கு இடையில் காணப்பட்ட சீமெந்து கலவை நேற்று(04) காலை உடைந்து வீழ்ந்துள்ளது.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இதன்போது கடைக்கு சென்ற 7 வயதான சிறுவனின் தலையில் சீமெந்து கலவை வீழ்ந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த கட்டிடத்தின் உறுதித்தன்மை மற்றும் பராமரிப்பு குறைபாடுகள் குறித்து காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். அதேவேளை ஹெலமுத்து செவன தொடர்மாடி குடியிருப்பு 2019ஆம் ஆண்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.