மணல் மோசடியில் பிரதமரின் செயலாளர்?
கந்தளாய்ப் பகுதியில் மணல் கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறப்படும் பிரதமர் மகிந்தவின் ஒருங்கிணைப்பு செயலாளர் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.
சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்புச் செயலாளர் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தில் உயர் பதவியில் இருந்த போதே இந்த மணல் கடத்தல் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து கந்தளாய் பிரதேச சபையின் தலைவரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கந்தளாய் சூரியபுர வண்ணத்துப்பூச்சி பாலத் துக்கு அருகிலுள்ள சோமாவதி பூங்கா மற்றும் முகத்துவாரங்களுக்கு அருகில் இடம்பெற்ற இந்த மணல் கடத்தல் பாரிய சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.