இந்தியா செய்த ரகசியவேலை!
இந்தியா தனது மூன்றாவது அரிஹந்த் வகை அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பலை விசாகப்பட்டினத்தில் கடல் சோதனையில் இறக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
செயற்கைகோள் படங்களை மேற்கோள் காட்டி இங்கிலாந்தை தளமாக கொண்ட ஜேன்ஸ் டிஃபென்ஸ் வீக்லி பத்திரிக்கை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதேவேளை இந்த நீர்மூழ்கி கப்பல் குறித்து இந்திய கடற்படை வெளிப்படையாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.
இந்தியா அணுசக்தியில் இயங்கும் நான்கு அரிஹந்த் வகை நீர்மூழ்கி கப்பலை கட்ட திட்டமிடப்பட்டு அவற்றில் முதல் நீர்மூழ்கி கப்பலான INS அரிஹந்த் 2016ல் இயக்கப்பட்டது. இரண்டாவது நீர்மூழ்கி கப்பலான INS அரிகாட் 2017 முதல் மார்ச் 2021 வரை கடல் சோதனையை முடித்தது.
அடுத்த வருடம் சேவையில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மூன்றாவது அரிஹந்த் வகை பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கி கப்பலை(SSBN) நவம்பர் 23 அன்று ரகசியமாக இந்தியா கடலில் இறக்கியுள்ளதாக ஜேன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இது குறித்து ஜேன்ஸ் நிறுவனம் மேலும் குறிப்பிடுகையில்,
அத்துடன் இந்த மூன்றாவது நீர்மூழ்கி கப்பலுக்கு பெயர் சூட்டப்படாத நிலையில் S4 என்ற குறியீட்டுடன் அழைக்கப்படுகிறதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. INS அரிஹந்த் 6,000 டன் எடை மற்றும் 111.6 மீட்டர் நீளம் கொண்டது.
ஆனால் அரிஹந்துடன் ஒப்பிடும் போது S4 7,000 டன் எடை மற்றும் 125.4 மீட்டர் நீளம் கொண்ட பெரிய நீர்மூழ்கி கப்பல் ஆகும். அணு ஆயத ஏவுகணைகளை ஏவுவதற்கு மற்ற நீர்மூழ்கி கப்பலில் நான்கு குழாய்கள் மட்டுமே இருக்கும் நிலையில் S4ல் அதன் கூடுதல் நீளம் 8 ஏவுகணை குழாய்களை கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
INS அரிஹந்த் மற்றும் அரிகாட் நீர்மூழ்கி கப்பலில் பாலிஸ்டிக் ஏவுகணைகளான SLBM, K-4, K-5 ஆகியவை முறை 750 கி.மீ முதல் 5,000 கி.மீ வரை தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது.
S-4 தற்போது கடலில் இறக்கியுள்ள நிலையில் நான்காவது அரிஹந்த் வகை கப்பலான S-4 தற்போது கட்டுமானத்தில் உள்ளதாகவும் 2025ல் சேவையில் இணையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறதாக மேலும் குறிப்பிடப்படுள்ளது.