பிக்பாஸ் போட்டியாளர்களின் ரகசிய பேச்சு; அம்பலமான தகவல்!
பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட வீட்டில் தற்போது 15பேரே இருக்கிறார்கள். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் இசைவாணிக்கு பிக்பாஸ் காயின் டாஸ்கின் தொடர்ச்சியாக வீட்டின் கிச்சன் பொறுப்பினை கொடுத்தார்.
இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் சில அதிரடி மாற்றங்களை செய்யப்போவதாகக் கூறிய இசைவாணி , கிச்சனில் சென்று தாமரையிடம் சற்றே கடுமையாக நடக்க தொடங்கினார்.
இதேபோல் நிரூப்பிடமும் சமையல் பொருகள் பயன்படுத்துவது தொடர்பில் இசைவாணி சற்று காட்டம் கட்டியுள்ளார். அத்தோடு பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் நீண்ட நாட்கள் கழித்து உறங்கும் அறையில் ஒன்றாக அமர்ந்து கலகலவென பேசிக்கொண்டு இருந்தபோது இமான் அண்ணாச்சி, இசைவாணி நடந்து வருவது போலும், பேசுவது போன்றும் செய்து காட்டினார்.
எனினும் குறிப்பாக, “இசைவாணியிடம் இந்த பொறுப்புகள் கொடுக்கப்பட்டதும், அவருடைய தோரணை மாறிவிட்டது. இப்போது ஜோக் சொன்னால் கூட சிரிக்க மாட்டார். வேண்டுமானால் யாராவது சொல்லி பாருங்கள்” என்று இமான் இசைவாணியை பற்றி கூறுகின்றார்.
தொடர்ந்து இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இசைவாணியின் இந்த திடீர் மாற்றம் பற்றி குறிப்பிட்ட இமான், சிபி உள்ளிட்டோர் அவரை நாமினேட் செய்து அவருடைய புகைப்படத்தை நெருப்பில் போட்டு பொசுக்கிய நிலையில் இசைவாணியும் இமான் அண்ணாச்சியை நாமினேட் செய்து இருக்கிறார்.
அதேவேளை “பொறுப்பு என்று வரும்பொழுது நாம் அதை சரியாக செய்ய வேண்டுமென்கிற ஒரு சிந்தனை தான் தனக்கு இருப்பதாக இசைவாணி கூறியிருந்தமமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.