பளிங்குபோல் மின்னும் பளபளப்பு; கொரியப் பெண்களின் அழகின் ரகசியம் இதுதானா!
கொரியப் பெண்களைபோல மீன்னும் அழகு தமக்கில்லையே என ஏங்காத பெண்கள் இல்ல என்றே சொல்லலாம். அவர்கள் தங்களுடைய பிரத்யேகமாக இயற்கையான முறையில் சில சருமப் பராமரிப்புகளைப் பின்பற்றுகிறார்கள்.
அதனால் தான் அவர்கள் அவ்வலவு அழகாக இருக்கின்றார்களாம்.
அந்த ரகசியம் இதுதான்
சருமத்துக்கு க்ளன்சிங்,
சருமத்துக்கு கிளன்சிங் தான் மிக அடிப்படையானது. க்ளன்சிங் மூலம் தான் சருமத்தில் உள்ள அழுக்குகள், மாசுக்களை நீங்கி சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.
அந்த வகையில் கொரியப் பெண்கள் தங்களுடைய சருமத்தை சுத்தம் செய்ய டபுள் க்ளன்சிங் முறையை பின்பற்றுகிறார்களாம்.
அதாவது முதலில் ஆயில் அப்ளை செய்து அதன்மூலம் அழுக்குகளை அகற்றி, அதன்பின் வழக்கமான பேஸ்வாஷ் சோப் போன்ற க்ளன்சர்களை பயன்படுத்தி தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவுவது.
ஷுட் மாஸ்க்
சருமத்துக்கு பேஷியல் மாஸ்க் போடுவது நல்லது. அதேசமயம் கொரியப் பெண்கள் க்ரீம்களாக பயன்படுத்துவதை விட ஷீட் மாஸ்க்கை பயன்படுத்துவதை தான் அதிகமாக விரும்புகிறார்களாம்.
அதிலும் பலர் தினமும் ஷீட் மாஸ்க் பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்தும்போது சருமம் பொலிவடைவதோடு நீர்ச்சத்துடனும் இருக்கும்.
சூரியக் கதிர்வீச்சு
கொரியப் பெண்கள் தங்களுடைய சருமத்தை எப்போதும் சூரியக் கதிர்வீச்சின் காரணமாக உண்டாகும் புற ஊதா கதிர்களின் தாக்கத்தை ஏற்படுத்தவே விடமாட்டார்களாம்.
குளிர்காலமாக இருந்தாலும் சன் ஸ்கிரீன் அப்ளை செய்யாமல் வெளியே வர மாட்டார்களாம். அதுதான் இவர்களுடைய சருமம் வயதாகாமல் இளமையாக இருக்க முக்கிய காரணமாம்.
ஃபேஷியல் மசாஜ்
சருமத்துக்கு பயன்படுத்தும் சருமப் பராமரிப்பு பொருள்கள் தேர்வு செய்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு ஃபேஷியல் மசாஜ் செய்ய வேண்டியது முக்கியம்.
வட்ட வடிவில் ஃபேஷியல் மசாஜ் செய்யும்போது சருமத்தின் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் சருமம் பளபளப்பும் பொலிவும் பெறும்.
தூக்கம் அவசியம்
இவை எல்லாவ்ற்றையும் விட மிக முக்கியமானது நல்ல ஓய்வும் சரியான அளவு தூக்கமும் தான்.
ஒரு நாளைக்கு குறைந்தது 7 மணி நேரமாவது தூங்குவதைக் கட்டாயமாகக் கொள்ள வேண்டியது அவசியம்.