எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் வெளியான ரகசிய தகவல்
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீப்பற்றியதன் காரணமாக நாட்டிற்கு கிடைக்கபெற வேண்டிய நட்டயீட்டை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளில் தொடர்புபட்ட வெளிநாட்டு காப்புறுதி நிறுவனம் ஒன்றினால் 250 மில்லியன் அமெரிக்க டொலரை கையூட்டலாக வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலான அறிக்கை ஒன்று உயர்நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக அந்த இரகசிய அறிக்கை சட்டமா அதிபரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளேவினால் இந்த அறிக்கை இரகசியமாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்த கப்பலில் தீப்பற்றியதால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நட்ட ஈட்டை வழங்கும் உத்தரவொன்றை வழங்குமாறு கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித்த ஆண்டகை உள்ளிட்ட தரப்பினரால் சமர்பிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு இன்று மீண்டும் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.