கொழும்பில் இரகசிய ஆயுதக்கிடங்கு; இளம் தம்பதி தலைமறைவு
கொழும்பு தெமட்டகொட பகுதியில் அமைந்திருந்த இரகசிய ஆயுதக் கிடங்கொன்றை பொலிஸார் சுற்றிவளைத்து, 19 உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வீட்டில் தங்கியிருந்த இளம் தம்பதியினர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீடு மூன்று மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு எடுக்கப்பட்டு இரகசிய பதுங்குமிடமாக பயன்படுத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தப்பியோடிய தம்பதியினர் குறித்து தகவல் அறிந்தவர்கள் பேலியகொட குற்றப்பிரிவிற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.