காணாமல் போன யாழ்.கடற்றொழிலாளர்களைத் தேடும் பணிகள் தீவிரம்
யாழ்ப்பாணம் பருத்தித்துறையிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போன கடற்றொழிலாளர்களை, இந்தியக் கடல் எல்லைப் பகுதியை அண்மித்துத் தேடுதல் நடத்த இந்திய அரசின் அனுமதியைப் பெற்று, தேடுதல் நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

"பருத்தித்துறைப் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்கள் காணாமல் போனமை தொடர்பில், கடற்படையினர் நீண்ட தேடுதல்களை நடத்தி வருகின்றனர்.
தேடுதல் பணிகள் விஸ்தரிக்கப்பட்டு, இந்தியக் கடல் எல்லைப் பகுதியை அண்மித்த இடங்களிலும் தேடுதல் நடத்த இந்திய அரசாங்கத்தின் அனுமதிகளைப் பெற்றுத் தேடுதல் பணிகளை முன்னெடுத்துள்ளோம்.
GPS ஊடாக அவர்களின் படகுகள் இருக்கும் இடத்தை அறிந்துகொள்ளக் கடுமையான முயற்சிகள் எடுத்தபோதிலும், அவை குறித்துக் கண்டறிய முடியவில்லை .
அத்துடன், ட்ரோன் மூலமாகக் கடற்பகுதியில் கடற்படையினர் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.