மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் கடல் கொந்தளிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கடுமையான கடல் சீற்றம் காரணமாக கடல் பிரதேசம் பேரிரைச்சலுடன் காணப்படுகின்றது.
அனர்த்த நிலைமை காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

மீண்டும் மாவட்டத்தில் பாரிய அளவிலான கடல் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மீனவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர் .
புதிய காத்தான்குடி ஏத்துக்கால் பூனொச்சிமுனை உட்பட மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் மீனவர்கள் கடும் அவலங்களை எதிர்கொண்டு வருகின்றனர்
கரையோர பிரதேசங்களில் அமைந்துள்ள மீனவர்களுக்கு சொந்தமான மீன் வாடிகளும் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ள நிலையில் கடல் மீன்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.