யாழ் மாவட்டத்திற்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து ; பேரழிவை சந்திக்கும் ; எச்சரிக்கும் யாழ். பல்கலையின் விரிவுரையாளர்
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 500 மில்லி மீற்றருக்கும் மேல் மழை பெய்யும் என யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில் யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை இன்று (07) முன்னெடுத்த அவர் மேலும் கூறுகையில்,
தாழ்வு மண்டலங்கள்
உருவாகியுள்ள தாழ்வு மண்டலமானது, நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகர உள்ளது. இது மணிக்கு 9 கிலோ மீற்றர் வேகத்தில் நகர உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்றும் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக 1970 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனவரி மாதத்தில் உருவாகியுள்ள 21 ஆவது தாழ்வு மண்டலமாக அமைகின்றது.
இலங்கையை உலுக்கிய சம்பவத்தின் பகீர் பின்னனி ; மகளின் பிறந்தநாளில் குடும்பத்தை எரித்த ஈவிரக்கமற்ற தந்தை
எதிர்வரும் 8,9,10 ஆம் திகதிகளில் கிழக்கு மாகாணம் பாரியளவு மழைவீழ்ச்சியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. அத்துடன் 9,10 ஆம் திகதிகளில் யாழ் மாவட்டம் மிக அதிக மழைவீழ்ச்சியை எதிர்கொள்ள உள்ளது.
எனவே பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு எச்சரிக்கையை அவதானத்தில் கொண்டு தங்களது பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.