போதைப்பொருளுடன் சிக்கிய பாடசாலை மாணவி
காலி, அம்பலாங்கொடை, குருந்துவத்த பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலை மாணவி ஒருவர் கைதாகியுள்ளார்.
குறித்த மாணவி, எல்பிட்டிய பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று (19) கைது செய்யப்பட்டதாக காலி பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
எல்பிட்டிய பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே பாடசாலை மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.
சகோதரன் போதைப்பொருள் விற்பனை
சம்பவத்தில் அம்பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 17 வயதுடைய மாணவி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை மாணவியின் சகோதரன் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், பாடசாலை மாணவியின் சகோதரன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில் அவரது மனைவி, பாடசாலை மாணவியின் உதவியுடன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.