துபாயில் இருந்து வந்தவர் விளக்கமறியலில்
OnmaxDT மோசடி பிரமிட் நிதி முதலீட்டு தரவுத்தளத்தை பராமரித்தமைக்காக துபாயில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கயான் விக்ரமதிலகேவை எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்று இன்று (21) உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியல் உத்தரவு
துபாயில் கைது செய்யப்பட்டு இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர், குற்றப் புலனாய்வுத் துறையினரால் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
OnmaxDT மோசடி பிரமிட் நிதி திட்டத்துடன் தொடர்புடைய வலைத்தளம், கணினிப் பொறியாளரான குறித்த சந்தேக நபரால் உருவாக்கப்பட்டது என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.