உறவினர்கள் மோதலில் பலியான பாடசாலை மாணவன் !
குருநாகலில் உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் பாடசாலை மாணவன் ஒருவர் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் குருநாகல், பண்டவஸ்நுவரை மேற்கு பிரதேசத்தில் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவனின் வீட்டுக்கு முன்னால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த மாணவன்
சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டவஸ்நுவரை பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் ஆர்.டி.அனுரப்பிரியதர்ஷன (வயது 18) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் 7 பேரைக் கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.