சனி வக்ர நிவர்த்தி ; இந்த ராசிக்காரர்கள் மிகுந்த அவதானத்துடன் இல்லையென்றால் பெரும் கஸ்டம் காத்திருக்கு!
ஒன்பது கிரகங்களில் சனி மிகவும் சக்திவாய்ந்த கிரகமாகக் கருதப்படுகிறது. சனி 2025 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி மீன ராசியில் பெயர்ச்சி அடைந்தார், சனி பெயர்ச்சிக்குப் பிறகு, ஜூலை 13, அன்று மீன ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். இதன் பின்னர் சனி நேரடியாக பயணிக்க தொடங்குவார்.
நவம்பர் 28, வெள்ளிக்கிழமை காலை 9.20 மணிக்கு மீன ராசியில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். 138 நாட்களுக்குப் பிறகு இந்த நிலையில் சனி பயணிப்பார். சனி நீதியின் கடவுள். இதனால் பல ராசிக்காரர்கள் பயனடைவார்கள், சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். நல்ல செயல்களை செய்யுங்கள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி பகவானை வணங்குங்கள்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு கவனமாக இருக்க வேண்டும். உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள். யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் நிதி சிக்கல்கள் மற்றும் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு கவனமாக இருக்க வேண்டும். உடல்நலத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். மனைவியின் பதற்றம் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க வேண்டும். மேலும், மீன ராசிக்காரர்கள் நிதி இழப்பு மற்றும் கடன் அதிகரிப்புக்கு ஆளாக நேரிடும்.
சனி பகவானின் அருள் பெற, 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்ற ஸ்லோகத்தை பாராயணம் செய்யலாம். இது தவிர சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை சொல்வதும் சனி பகவானின் அருள் கிடைக்கச்செய்யும்.