சனிப்பெயர்ச்சி ; வாழ்க்கையே மாறப்போகும் ராசிகாரர்கள் யார் தெரியமா?
வேத சாஸ்திரங்களின் படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய ராசியை மாற்றுகின்றன. இது ஒவ்வொரு ராசிகளின் மீதும் நேர்மறையான அல்லது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றுகிறார்.
நீதி பகவான் சனி பகவான் தனது சொந்த ராசியில் இருந்து வெளியேறி வியாழனின் ராசியான மீனத்தில் நுழைகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு மீன ராசியில் இருப்பார். சனியின் இந்த இடப்பெயர்ச்சி 3 ராசிகளின் வாழ்க்கையே சிறப்பாக மாறும். அந்த 3 ராசிகள் எவை என தெரிந்துகொள்ளலாம்.

வாழ்க்கையே மாறப்போகும் ராசிகள்
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் வரப்போகிறது. உடல் முன்பை விட சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் அமைதியும் ஒழுங்கும் பேணப்படும். அனைத்து வேலைகளும் சிறந்த முடிக்கப்படும். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வருமானத்திற்கான புதிய ஆதாயங்கள் உருவாகும். திருமண யோகம் கைகூடி வரும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சனியின் செல்வாக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் நிதி நிலைமை மேம்படும். வாழ்க்கை முன்பை விட அழகாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலை இப்போது நிறைவடையும். உடல் நல்ல நிலையில் இருக்கும், ஆரோக்கியமும் முன்பை விட மிகவும் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு, சனி பதினொன்றாம் வீட்டில் இருக்கிறார். குடும்பத்தில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளும் இப்போது தீரும். கடன் சுமை குறையும். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த தொகை திரும்ப கிடைக்கும்.
