இரகசியமாக கடிதம் அனுப்பிய சத்தியலிங்கம்: சாணக்கியன் சுமந்திரனின் கூட்டுச்சதி அம்பலம்!
நாடாளுமன்றத்தில் மூத்தவர்கள் என்ற அடிப்படையில் ஆசனங்கள் ஒதுக்கப்படுவது வழமை. அந்த அனுபவத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஆண்டின் அடிப்படையிலும், எத்தனை தடவை நாடாளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டார்கள் என்ற அடிப்படையிலும் தான் வழங்கப்படுவது நாடாளுமன்ற மரபு.
இலங்கை தமிழரசு கட்சி தற்போதைய 10ஆவது நாடாளுமன்றத்தில் 8 ஆசனங்களுடன் நாடாளுமன்றத்தின் 3ஆவது பெரிய கட்சியாக உள்ளது.
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவராக சிறீதரன் இருக்கிறார். சிறீதரன் 2010 இல் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
தொடர்ச்சியாக 4 தடவைகளில் இரு தடவைகள் அதிகூடிய வாக்குகளால் யாழ்.தேர்தல் தொகுதி மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவராகவும் இருக்கிறார்.
நாடாளுமன்றத்தின் முதல் வரிசையில் மூத்தவர்கள் அடிப்படையிலும், கட்சி தலைவர்களுக்கும் தான் ஆசனங்கள் ஒதுக்கப்படும். இந்த தடவை கட்சி தலைவர் என்ற அடிப்படையில் சிறீதரனுக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறீதரனுக்கு பக்கத்தில் சாணக்கியனுக்கும் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழரசுக்கட்சியில் சாணக்கியனைவிட இரண்டு மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களாக மட்டக்களப்பை சேர்ந்த சிறீநேசனும், அம்பாறையை சேர்ந்த கோடீஸ்வரனும் இருக்கிறார்கள்.
இவர்கள் இருவரும் 2015 இல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள். அதே 2015 இல் சாணக்கியன், இசைப்பிரியாவை கற்பழித்து பாலகன் பாலச்சந்திரனை கொலை செய்த இனப்படுகொலையாளி மஹிந்த ராஜபக்சவுடன் சுதந்திர கட்சியில் மட்டக்களப்பில் தேர்தல் கேட்டு படுதோல்வியடைந்தவர்.
2020 இல் சுமந்திரன் அழைத்துவந்து தமிழரசுக்கட்சியில் கேட்டு தான் வெற்றி பெற்றார். ஆக, தற்போது தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூத்தவர் என்று பார்த்தால் முதலாவதாக சிறீதரனும் இரண்டாவதாக சிறீநேசன், கோடீஸ்வரனுமே காணப்படுகிறார்கள்.
ஆனால் மூத்தவர் வரிசையில் 4ஆவது இடத்தில் உள்ள சாணக்கியனுக்கு முதல் வரிசையில் ஆசனம் வழங்கப்பட்டிருக்கிறது. இது எப்படி நடந்தது என்று நாடாளுமன்றத்தில் விசாரித்தால், பெரும் தில்லாலங்கடி விளையாட்டு ஒன்று சிக்கியிருக்கிறது.
தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் சத்தியலிங்கம், நாடாளுமன்ற செயலாளருக்கு முகவரியிட்டு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார்.
அதில் “தமிழரசுக்கட்சி சார்பாக கோப் குழுவில் கௌரவ சிறீதரன், கொரவ சாணக்கியன் ஆகியோர் உள்ளார்கள், ஆதலால் கட்சி தலைவர் சிறீதரனுக்கு அருகில் முதல் வரிசையில் சாணக்கியனுக்கும் ஓர் ஆசனம் வழங்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என ஒரு கடிதம் 2024 நவம்பர் மாதம் அனுப்பியிருக்கிறார்.
தமிழரசுக்கட்சிக்கு நாடாளுமன்ற குழு இருக்கிறது, கட்சிக்கான ஒரு கட்டமைப்பு இருக்கிறது. இவற்றை எல்லாம் கேட்காமல், கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவரையே கேட்காமல் சத்தியலிங்கம் தன்பாட்டில் கடிதம் அனுப்பி இருப்பது ஒரு கீழ்த்தரமான கேவலமான செயற்பாடு என கட்சியின் செயற்பாட்டாளர்கள் பலர் விசனம் தெரிவிக்கிறார்கள்.
சத்தியலிங்கத்தின் இந்த செயற்பாடு கட்சியை அழித்து சிதைக்கும் சுமந்திரன் தரப்பிற்கு சார்பாகவே தொடர்ந்து இருப்பது அம்பலப்பட்டிருப்பதாகவும் பேசிக்கொள்கிறார்கள்.
இந்த நிலையில் சாணக்கியனுக்கு முதல் வரிசையில் இடம் வழங்கப்பட்ட குறித்த பிழையான நடைமுறையை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று தமிழரசுக்கட்சியின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற குழுவின் தலைவர் சிறீதரனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக நாடாளுமன்ற செயலாளருக்கு விடயத்தை தெரியப்படுத்தி மூத்தவர் அடிப்படையில் முதல் வரிசை ஆசனத்தை வழங்கும்படி சிறீதரன் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரியவருகிறது.