யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட புடவை கடை முதலாளி ; அதிர்ச்சி கொடுத்த காரணம்
யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளிவாசல் ஒழுங்கை பகுதியில் ஐஸ்போதை பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (14) அன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களும் புடவை கடையின் முதலாளி மற்றும் தையல் தொழிலாளி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதை பொருள் பறிமுதல்
வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, மேற்கொண்ட நடவடிக்கை மூலம் இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். 16 கிராம் 900 மில்லிகிராம்,11 கிராம்100 மில்லிகிராம் அளவுடைய ஐஸ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களும் புடவை கடையின் முதலாளி மற்றும் தையல் தொழிலாளி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு சந்தேக நபர்களும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.