16 ஆண்டுகள் கடூழிய சிறை ; பலத்த பாதுகாப்புடன் சென்ற சரண குணவர்தன
ஊழல் வழக்கில் 16 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சரண குணவர்தன பலத்த பாதுகாப்பில் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன, பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நான்கு தனித்தனியான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், ஒவ்வொரு வழக்குக்கும் நான்கு ஆண்டுகள் வீதம் மொத்தமாக 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தீர்ப்பைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் இருந்து சிறைச்சாலைக்கு அவர் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.