மஹிந்தவுக்கு பிறந்தாநாள் வாழ்த்து கூறிய இந்திய உயர்ஸ்தானிகர்
இன்று 80 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு , இந்திய கொன்சியுலர் நாயகம் ஸ்ரீ ஹர்விந்தர் சிங் இன்று (18) காலை, தங்காலையில் 'கால்டன்' இல்லத்துக்குச் சென்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் வாழ்த்துச் செய்தியைத் தெரிவிப்பதற்காகவே கொன்சியுலர் நாயகம் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

சந்தோஷ் ஜாவின் வாழ்த்துச் செய்தி
இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், "இன்று (18) காலை தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்துக்கு விஜயம் செய்த இந்திய கொன்சியுலர் நாயகம் ஸ்ரீ ஹர்விந்தர் சிங்,
எனது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில், இராஜதந்திர ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியிலும் எமக்கிடையே நிலவும் நட்புறவை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து, எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
