சனி-சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றியோ, தங்களின் நிலைகளின் மூலமோ, மற்ற கிரகங்களுடனான சேர்க்கையின் மூலமோ சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இந்நிலையில் சூரியன் நவம்பர் 16 ஆம் தேதி சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார்.

அப்படி விருச்சிக ராசிக்குள் நுழையும் போது, நீதிமான் சனி பகவான் மீன ராசியில் இருப்பார். இதனால் சனி மற்றும் சூரியனின் கூட்டணியால் நவபஞ்சம ராஜயோகம் உருவாகிறது.சனி-சூரியனுக்கு இடையே உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறவுள்ளனர். குறிப்பாக நீண்ட கால கடின உழைப்புக்கான பலனைப் பெறவுள்ளனர்.
இப்போது சனி-சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்
சனி-சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகமானது கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். நவம்பர் 16-க்கு பின் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அதுவும் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்காக காத்துக் கொண்டிருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் இக்காலத்தில் கிடைக்கும். நிதி ரீதியாக இக்காலம் அற்புதமாக இருக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். தொழிலதிபர்களுக்கு தங்களின் தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம்
சனி-சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகமானது விருச்சிக ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையையும், வலிமையையும் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள். சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மகரம்
சனி-சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் மகர ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. சிலருக்கு எதிர்பார்த்த இடத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நல்ல நிதி முன்னேற்றங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. நீதிமன்ற வழக்குகுளில் நல்ல வெற்றி கிடைக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்
