சனி பகவானை சனிக்கிழமையில் இவ்வாறு வழிபட்டால் கஷ்டங்கள் தீர்ந்து போகும்?
கர்மா மற்றும் நீதி ஆகியவற்றிற்கான தெய்வமாக சனி பகவான் கருதப்படுகிறார்.
பொதுவாக தெய்வங்களின் அருட்பார்வை நம் மீது பட வேண்டும் என்று தான் மற்ற அனைத்து கோவில்களிலும் சென்று வேண்டிக் கொள்வோம். இருப்பினும் சனி பகவானின் நம் மீது பட்டு விடக்கூடாது என்று தான் அனைவரும் வேண்டிக் கொள்வார்கள்.
சனியின் பார்வை நம்மீது நேரடியாக பதிவது நல்லதல்ல என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. நீண்ட ஆயுள், அகால மரணம் என இரண்டுக்குமே காரணமானவர் சனிபகவான் தான்.
சனி பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் ஆட்சி பெற்றோ, உச்சம் பெற்றோ இருந்தால் அவர் அனைத்து விதமான செளபாக்கியங்களையும் பெற்று, வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவார்.
"சனி கொடுத்தால் எவர் தடுப்பார்?" என சொல்வார்கள். அது போல சனி பகவான் எந்த அளவிற்கு துன்பத்தை கொடுக்கக் கூடியவரோ, அதே அளவிற்கு நல்ல பலன்களையும் வழங்கக் கூடியவர்.
கருப்பு எள், கருப்பு உளுந்து, வெல்லம் ஆகியவற்றை கருப்பு துணியில் சுற்றி, அவற்றை அரச மரத்தடியில் வைத்து, சனி பகவானின் அருளை வேண்டி வழிபட வேண்டும்.
பிறகு இந்த பொருட்களை சனியின் கெடு பார்வையால் கடுமையாக பாதிக்கப்பட்டு, கஷ்டப்படுபவர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும்.
பின்னர் சனி பகவான் ஆலயத்திற்கு சென்று கடுகு எண்ணெய்யில் சனி பகவான் சன்னதி முன் விளக்கேற்றி வழிபட வேண்டும். முக்கியமாக சனி பகவானுக்கு நேராக நின்று வழிபடக் கூடாது.
சனிக்கிழமைகளில் , "ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரெளம் ஷக் சனைச்சராய நமஹ" , "நீலஞாஜன ஸ்மாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்! ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்".
"ஓம் ஷம் சனைஸ்சராய நமஹ"
ஆகிய மந்திரங்களை 108 முறை சொல்லி வழிபட்டால் நன்மைகள் வந்து சேரும்.