இலங்கை அணி குறித்து சங்கக்கார வெளிப்படை விமர்சனம்
இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களின் திட்டமிடலும் அதைச் செயல்படுத்திய விதமும் சிறப்பாக இருந்த போதிலும், துடுப்பாட்ட வீரர்கள் அதற்கு நேர்மாறாக செயற்பட்டுள்ளார்கள் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார விமர்சித்துள்ளார்.
இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று (22) இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 51 ஓட்டங்களால் அடைந்தது.
இந்த தோல்வி குறித்து, குமார் சங்கக்கார தனது 'X' கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணிக்கு இது ஒரு சிறந்த ஆட்டமாக அமையவில்லை. பந்துவீச்சாளர்களின் திட்டமிடலும் அதைச் செயல்படுத்திய விதமும் சிறப்பாக இருந்த போதிலும், துடுப்பாட்ட வீரர்கள் அதற்கு நேர்மாறாகவே சொதப்பினர்.
துடுப்பாட்டத்தில் கைகளை இறுக்கமாகப் பிடித்து ஆடிய விதம், கமில் மிஷாரவின் ஆட்டத்தில் இருந்த முனைப்பு இன்றைய போட்டியில் இல்லாமை மற்றும் ஆடுகளம் அல்லது போட்டியின் நிலையைச் சரியாகப் புரிந்து கொள்ளத் தவறியமை ஆகியவையே இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Not a great outing by @OfficialSLC against England. The planning and execution by the bowlers were in sharp contrast to the same by the batters. Hard hands, mishara’s lack of intent and not reading the game situ or pitch cost them.
— Kumar Sangakkara (@KumarSanga2) February 22, 2026