சனத் நிஷாந்தவுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மாற்றியுள்ளது.
வழக்கின் பிரதிவாதியான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த காலமானதால், இந்த மனுக்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் 2024 பெப்ரவரி 02 ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய இருவரடங்கிய நீதியரசர் குழாம் உத்தரவிட்டுள்ளது.
சட்டத்தரணி பிரியலால் சிறிசேன மற்றும் சட்டத்தரணி விஜித குமார ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் இன்று (31-01-2024) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.