இலங்கையில் பலம்மிக்க அரசியல் மாற்றம் ; புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் சம்பிக்க
இலங்கையில் பலம் மிக்க அரசியல் மாற்றம் ஒன்று உருவாக அனைத்து விடயங்களும் தயார் நிலையில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் பலம் பொருந்திய அரசியல் மாற்றம் ஒன்று உருவாவதை யாராலும் தடுக்க முடியாது.
நாட்டினை வங்குரோத்து செய்தோரை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக உள்ளனர்.

தரத்துடன் கூடிய பாரியளவிலான பல கோணங்களுடன் ஒரு அரசியல் கூட்டணி நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்காலத்தில் ஒன்று சேர்ந்து சிறந்த ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்க உள்ளோம்.
அதே போன்று சிறந்த தேர்ச்சியான வேட்பாளர் குழுவினை பொதுத் தேர்தலிலும் களமிறக்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.