தமிழ் அரசியலில் பரபரப்பு ; டக்ளஸ் தேவானந்தா விவகாரத்தில் எழும் கடும் கேள்விகள்
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்தது தவறான நடைமுறையாகவும், அநீதியான நடவடிக்கையாகவும் உள்ளதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அண்மையில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட இந்த கருத்து தமிழ் மக்கள் மத்தியில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக, டக்ளஸ் தேவானந்தாவின் கைது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் மற்றும் விவாதங்கள் சமூக, அரசியல் தளங்களில் எழுந்துள்ளன.

டக்ளஸ் தேவானந்தாவின் கைதியைத் தொடர்ந்து, பல அரசியல்வாதிகள் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, பிள்ளையான், அதன் பின்னர் இனியபாரதி மற்றும் அவரின் சகாக்கள் என தொடர்ச்சியாக இடம்பெற்ற கைது நடவடிக்கைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த கைது நடவடிக்கைகளுக்கிடையில் ஒரு பொதுவான ஒற்றுமை காணப்படுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.