நாடாளுமன்றத்திற்குள் முன்னாள் ஜனாதிபதி ரணில்? மீண்டும் இணையும் முக்கிய கூட்டணி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றம் செல்லுமாறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அவரிடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதற்கு அவர் எவ்வித பதிலும் வழங்கவில்லை. ஆனால் ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் நாடு வீழ்ச்சியடைந்தால் அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டாரென எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட சந்திப்பு
நேற்று (01) கொழும்பு - பிளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போதே இவ்விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. இந்த சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஐ.தே.க. உறுப்பினர் ஒருவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான இந்த சந்திப்பில் அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.
அரசாங்கம் தற்போது உய்ய நிலைமையில் நாடு முன்னோக்கிச் செல்வது மிகவும் கடினமாகும். எனவே இந்த பிரச்சினைகள் முறையாக முகாமைத்துவம் செய்யப்படாவிட்டால் முன்னோக்கிப் பயணிக்க முடியாது என்பதே அவரது நிலைப்பாடாகவுள்ளது.
இந்த நிலைமைகளைக் கருத்திக் கொண்டு நாடாளுமன்றத்துக்கு செல்லுமாறு இன்றும் நாம் அவரை வலியுறுத்தினோம். எனினும் அவர் புன்னகைத்து அதற்கு எந்த பதிலும் கூறவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சிக்கிடையில் சிறந்த சாதகமான பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. நேர்மறையாக இந்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுத்துச் செல்லப்படும். அடுத்து தேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில் இரு குழுக்களும் ஒன்றிணைந்தே களமிறங்கும் என்றார்.