எல்லா வாய்ப்பையும் வீணாக்கும் தமிழ்த் தலைமைகள்!
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தையும் வாய்ப்பையும் தமிழ்த் தலைமைகள் பயன்படுத்தவேண்டும் என்று நண்பர் ஒருவர் சொன்னார்.
மழைவெள்ளம் பதுங்கு குழிகளுக்குள் நிறைந்து முழங்கால் வரை வெள்ளம் நிறைந்திருந்த 2009 இன் இதே நாட்களில் பதுங்கு குழிகளிற்குள் செல்லமுடியாமல் இயற்கை இடரால் துயருற்றிருந்த மக்கள் மீது அன்று மட்டும் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான எறிகணைகளை வீசிய உலகில் மிக மோசமான கொடுங்கோலர்களாக தம்மை அடையாளப்படுத்திய ராஜபக்சக்களுக்கு நாடாளுமன்றத்தில் “பயங்கரவாதத்தை தோற்கடித்தமைக்கான பாராட்டுப்பத்திரம்” வாசித்தவர்தான் திருவாளர் சம்பந்தன் அவர்கள்.
இனப்படுகொலைக்கு கட்டளையிட்ட இன்னொரு கொடுங்கோலன் சரத்பொன்சேகாவிற்கு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிக்க வைத்த அரசியலைச் செய்தவர்தான் நாம் மாற்றத்தை பயன்படுத்தவேண்டும் என்று நம்பும் அல்லது கோரிக்கை வைக்கும் திருவாளர் சம்ந்தன் அவர்களும் அவரின் பரிவாரங்களும்.
எங்கெல்லாம் மௌனமாக இருக்கவேண்டுமோ அங்கெல்லாம் வாய்திறப்பது. எங்கெல்லாம் வாய்திறக்கவேண்டுமோ அங்கெல்லாம் மௌனமாக இருப்பது. இத்தகையை சம்பந்தன் பரிவாரங்கள் என்றும் எத்தகைய வாய்ப்பையும் பயன்படுத்தப்போவதில்லை. தங்கள் சொகுசு வாழ்வுக்காக மீதமிருக்கும் மக்களிற்கும் வாய்க்கரிசிதான் போடுவார்கள்.
எல்லா வாய்ப்பையும் வீணாக்கும் இவர்களை ஏன் மக்கள் தமக்கு தலைவர்களாக வைத்திருக்கவேண்டும்.? வாய்ப்பைப் பயன்படுத்துவதற்கோ காப்பை மேற்கொள்வதற்கோ எந்த அரசியல் வாதியும் தகுதியானவரும் இல்லை. தேவையும் இல்லை.
மக்கள் தங்கள் கூட்டுமுடிவால் எல்லாவற்றையும் எதிர்கொள்ளட்டும். எதிர்கொள்வார்கள்.
ராஜபக்சக்களோடு சேர்த்து துரத்தவேண்டியது ராஜபக்சக்களின் இனப்படுகொலையிலும் ஊழலிலும் ஏமாற்றுக்களிலும் பங்கெடுத்த இந்த பெருச்சாளிகளையும் தான் என்பதை நாம் இந்நாட்களில் சுட்டிக்காட்டாவிட்டால் அவர்களின் பாவத்தை நாமும் சுமக்கவேண்டிவரும். என முகநூலில் கனடாவில் வாழந்து வரும் தமிழர் Indran Raveendran என்ற நபர் பதிவிட்டுள்ளார்.