தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் ; வெளியானது தீர்ப்பு!
இந்தியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.
தன்பாலின திருமணம் தொடர்பில் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல்இ எஸ்.ரவீந்திர பட்இ ஹீமா கோலி பிஎஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு 4 வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளன.
நாட்டை சுதந்திரத்துக்கு முந்தைய காலத்துக்கு இழுத்துச் செல்லும்
அதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தன் பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்க சிறப்பு திருமண சட்டத்தினை ரத்து செய்தால் அது நாட்டை சுதந்திரத்துக்கு முந்தைய காலத்துக்கு இழுத்துச் செல்லும் என சுட்டிக்காட்டினார்.
அதோடு உச்ச நீதிமன்றத்தால் சட்டத்தை உருவாக்க முடியாது சட்டத்தை கையாள மட்டுமே முடியும். சிறப்புத் திருமண சட்டத்தை ரத்து செய்யவோ அதற்குள் அர்த்த்ங்கள் கற்பிக்கவோ முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த வழக்கில் தொடர்ந்து 10 நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில் வழக்கின் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி தன்பாலின திருமணங்களுக்கான சட்ட உரிமையை நீதிமன்றங்கள் தாமாக சேர்க்க முடியாது.
சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.
மேலும் திருமணம் என்பது நிலையானது, மாறாதது என்று சொல்வது தவறானது. சிறப்பு திருமண சட்டத்தை ரத்து செய்வது நாட்டை சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்துக்குக் கொண்டு சென்றுவிடும் என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.