யாழ் ப.நோ.கூ சங்க மண்ணெண்ணை விற்பனை; மக்கள் விசனம்
யாழ்.வலி,கிழக்கு நீர்வேலி பலநோக்கு கூட்டுறவு சங்க கிளைகளில் கட்டுப்பாட்டு விலைகளை மீறி அதிக விலைக்கு மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுகிறதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அரசாங்கத்தினால் மண்ணெண்ணெய் விலை குறைப்பு செய்யப்பட்டு 245 ரூபாய் ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
பதுக்கிய மண்ணெண்ணெணை அனுப்பப்பட்டதா?
எனினும் நீர்வேலி பலநோக்கு நோக்கு கூட்டுறவு சங்கத்தின் கீழ் உள்ள கிளைகளில் 1லீற்ரர் மண்ணெண்ணெய் 255 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறதாக கூறப்படுகின்றது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் அரசாங்கத்தால் மண்ணெண்ணெய் விலை குறைப்புச் செய்யப்பட்டுள்ள நிலையில், பதுக்கிய மண்ணெண்ணெணை திடீரென கூட்டுறவு சங்கங்களின் கிளைகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டதா என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.