2025 ஆம் ஆண்டிலிருந்து அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிக்கை

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Government Employee Economy of Sri Lanka
By Sahana Sep 04, 2024 02:25 AM GMT
Sahana

Sahana

Report

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜனவரி முதல் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 24 - 50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ள விடயம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

 அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உதய.ஆர்.செனவிரத்ன தலைமையிலான நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

 அதன்படி அரச சேவையின் அலுவலக உதவியாளர் தரம் மூன்றிற்கு 5,450 ரூபாவினாலும், இரண்டாம் தரத்திற்கு 8,760 ரூபாவினாலும், தரம் ஒன்றிற்கு 10,950 ரூபாயினாலும் சம்பளம் அதிகரிக்கப்படவிருப்பதோடு, அதன் உயர்தர சேவைகளுக்கு 13,980 ரூபாவினால் சம்பள அதிகரிப்பு செய்யப்படவுள்ளது.

2025 ஆம் ஆண்டிலிருந்து அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிக்கை | Salary Hike For Civil Servants 2025 24 50 Percent

அதேபோல் சாரதி சேவையின் மூன்றாம் தரத்தின் சம்பளம் 6,960 ரூபாவினால் அதிகரிக்கப்படும். இரண்டாம் தரத்தின் சம்பளம் 9,990 ரூபாவினாலும், முதலாம் தரத்திற்கு 13,020 ரூபாவினாலும், விசேட தரத்திற்கு 16,340 ரூபாவினாலும் சம்பள அதிகரிப்பு கிடைக்கும்.

மூன்றாம் நிலை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு ரூ.8,340 சம்பள உயர்வும், இரண்டாம் தரத்திற்கு ரூ.11,690 சம்பள உயர்வும், முதலாம் தரத்திற்கு ரூ.15,685 சம்பள உயர்வும் கிடைக்கும்.

முகாமைத்துவ சேவை அதிகாரி/முகாமைத்துவ உதவியாளர் தரம் III இற்கு ரூ. 10,140 மற்றும் தரம் II இற்கு ரூ.13,490 உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முதல் தர சம்பளம் 17,550 ரூபாயால் அதிகரிக்கப்படும். அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் மூன்று சம்பள உயர்வு 12,710 ரூபாவினாலும் இரண்டாம் தரத்திற்கு ரூ.17,820, முதல் தரத்திற்கு ரூ.25,150 வினாலும் அதிகரிக்கப்படும்.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப சுகாதார பணியாளர் மூன்றாம் தரத்தின் சம்பளம் 12,885 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

2025 ஆம் ஆண்டிலிருந்து அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிக்கை | Salary Hike For Civil Servants 2025 24 50 Percent

இரண்டாம் தரத்திற்கு ரூ.17,945 சம்பள உயர்வும் முதலாம் தரத்திற்கு ரூ.25,275 சம்பள உயர்வும் கிடைக்கும். கதிரியக்க நிபுணர் மற்றும் மருந்தாளர் மூன்றாம் தரத்திற்கு ரூ.13,280 சம்பள அதிகரிப்பும், இரண்டாம் தரத்திற்கு ரூ.18,310 சம்பள உயர்வும் முதலாம் தரத்திற்கு ரூ.25,720 சம்பள உயர்வும் கிடைக்கும்.

மூன்றாம் தர தாதியர் உத்தியோகத்தரின் சம்பளம் 13,725 ரூபாயாலும், இரண்டாம் தரத்திற்கு ரூ.18,835 சம்பள அதிகரிப்பும், முதலாம் தரத்தினருக்கு ரூ.26,165 சம்பள உயர்வும் வழங்கப்படவுள்ளது.

அதிபர் சேவையின் மூன்றாம் தரத்தின் சம்பளம் 23,425 ரூபாவினாலும், இரண்டாம் தரத்தின் சம்பளம் 29,935 ரூபாவினாலும், மூன்றாம் தரத்திற்கு 39,595 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும்.

ஆசிரியர் சேவையில் உள்ள கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு ரூ.17,480 சம்பள உயர்வும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.19,055 அதிகரிப்பும், இரண்டாம் தரத்திற்கு ரூ.20,425, முதல் தரத்திற்கு 38,020 ரூபாயும் முன்மொழியப்பட்டுள்ளது. பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சம்பள உயர்வாக ரூ.10,704 பெறுவார்.

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சம்பள ரூ.13,210 வினாலும், சப்-இன்ஸ்பெக்டர்களின் சம்பளம் ரூ.14,050 வினாலும் அதிகரிக்கப்படும். பொலிஸ் பரிசோதகரின் சம்பளம் ரூ.18,290, பிரதான பொலிஸ் பரிசோதகரின் சம்பளம் ரூ.23,685 அதிகரிக்கப்படவுள்ளது.

2025 ஆம் ஆண்டிலிருந்து அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிக்கை | Salary Hike For Civil Servants 2025 24 50 Percent

கிராம உத்தியோகத்தர் முதலாம் தர சம்பளம் 11,340 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளது. அந்த சேவையின் இரண்டாம் தரத்திற்கு ரூ.14,690, முதலாம் தரத்தினருக்கு ரூ.18,750 சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது.

நிர்வாக கிராம அதிகாரியின் சம்பளம் ரூ.23,575 அதிகரிக்கும். உதவிச் செயலாளர், உதவிப் பணிப்பாளர், கணக்காளர், உதவிப் பிரதேச செயலாளர், உதவி ஆணையாளர் ஆகியோரின் சம்பளம் 28,885 ரூபாவினால் அதிகரிக்கப்படும்.

பிரதி பணிப்பாளர் ,பிரதி ஆணையாளர்களின் ஆரம்ப சம்பளம் 43,865 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளது.

பிரதேச செயலாளர், பணிப்பாளர், ஆணையாளர், சிரேஷ்ட உதவி செயலாளர் ஆகிய பதவிகளுக்கான சம்பளம் 57,545 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

ஆரம்ப தர வைத்தியர்களின் சம்பளம் 35,560 ரூபாவினால் அதிகரிக்கப்படும். இரண்டாம் தர வைத்தியர்களின் சம்பளம் ரூ.39,575 ஆல் அதிகரிக்கப்படவுள்ளது. முதலாம் தர வைத்தியர்களுக்கான சம்பள அதிகரிப்பு 53,075 ரூபாவினாலும், மேலதிக செயலாளர் மற்றும் விசேட வைத்தியர்களின் சம்பளம் 70,200 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

2025 ஆம் ஆண்டிலிருந்து அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிக்கை | Salary Hike For Civil Servants 2025 24 50 Percent

உதவிச் செயலாளர், உதவிப் பணிப்பாளர், கணக்காளர், உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் உதவி ஆணையாளர் ஆகிய பதவிகளுக்கான சம்பளம் 28,885 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

பிரதிப் பணிப்பாளர் மற்றும் பிரதி ஆணையர்களின் அடிப்படைச் சம்பளம் 43,865 ரூபாயாவினாலும் பிரதேச செயலாளர், பணிப்பாளர், ஆணையர், சிரேஷ்ட உதவிச் செயலர் பதவிகளுக்கான சம்பளம் ரூ.57,545 வினாலும் உயர்த்தப்படும்.

அத்துடன் ஆரம்ப நிலை வைத்தியர்களின் சம்பளம் 35,560 ரூபாவினாலும் இரண்டாம் நிலை வைத்தியர்களின் சம்பளம் 39,575 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

முதலாம் நிலை வைத்தியர்களுக்கு 53,075 ரூபாவும், மேலதிக செயலாளர் மற்றும் விசேட வைத்திய பதவிகளுக்கு 70,200 ரூபாவும் சம்பள உயர்வு வழங்கப்படும்.

2025 ஆம் ஆண்டிலிருந்து அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிக்கை | Salary Hike For Civil Servants 2025 24 50 Percent

அதே சமயம், அனைத்து அரச ஊழியர்களுக்கும் வழங்கும் வருடாந்தம் சம்பள உயர்வுத் தொகையை இரட்டிப்பாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், 2025 ஜனவரி 01 முதல் அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் சம்பளத்தை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US