இடைக்கால பிரதமாகிறாரா சஜித் பிரேமதாச?
இலங்கையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அடுத்த இடைக்கால அரசின் பிரதமராக முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜன பல கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
இலங்கை நாடாளுமன்றம் அடுத்த வாரம் கூடவுள்ளது. இருப்பினும், தொடர்ந்து அமைதியின்மை காரணமாக எதிர்க்கட்சிகள் பாதுகாப்பு கவலைகளை எழுப்பியுள்ளன. நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கூட்டுவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமகி ஜன பலவேகய கட்சி முன்மொழிந்துள்ளது. எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை தோற்கடிக்க அவர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
இலங்கையை ஆட்சி செய்த அதிருப்தி பொதுஜன பெரமுன கட்சி எம்.பி.க்கள், கட்சி கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த 10 சிறிய கட்சிகள் மற்றும் முன்னாள் பொதுஜன முன்னணியின் பிரதான கூட்டணி கட்சியான முன்னாள் அதிபா் மைத்ரிபால சிறீசேனாவின் இலங்கை சுதந்திரக் கட்சி ஆகியவை சமகி ஜன பலவெகய தலைவா் சஜித் பிரேமதாசா இடைக்கால பிரதமராவதற்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முடியும் எனவும், பின்னர் வேறு மாற்றங்களைச் செய்யலாம் என்றும் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்தார்.