நாட்டின் நெருக்கடி சூழலில் IMFயிடம் கடும் கோரிக்கை வைத்த சஜித்

Sajith Premadasa Sri Lanka IMF Sri Lanka
By Sahana Nov 28, 2025 08:32 PM GMT
Report

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள கடுமையான நிபந்தனைகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தளர்த்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

காலநிலை சீற்றத்திற்கு நடுவில் புதினம் பார்க்க வந்த தமிழர் பகுதி மக்கள்

காலநிலை சீற்றத்திற்கு நடுவில் புதினம் பார்க்க வந்த தமிழர் பகுதி மக்கள்

அவர் விடுத்துள்ள விசேட அறிவிப்பில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

டிட்வா புயலால் உயிர்களையும் சொத்துக்களையும் இழந்தவர்கள், இடம்பெயர்ந்துள்ளவர்கள், வீடுகளை இழந்துள்ளவர்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் இதனால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த அநுதாபங்களையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பெரும் அனர்த்ததால் பாதிக்கப்பட்ட மக்களுடன் எதிர்க்கட்சி முன்நிற்கிறது. மேலும், இந்த அனர்த்ததால் ஏற்படும் அசௌகரியம், அழுத்தம், துக்கம் மற்றும் இடர்பாடுகள் வலிகளைக் குறைக்க எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் பெற்றுத் தர முடியுமான அனைத்தையும் செய்யும்.

நாட்டின் நெருக்கடி சூழலில் IMFயிடம் கடும் கோரிக்கை வைத்த சஜித் | Sajith Make Strong Request Imf Amid Country Crisis

இந்த அனர்த்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பக்க பலத்தைப் பெற்றுத் தருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும் முழு எதிர்க்கட்சியும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்யத் தயாராக உள்ளன.

உள்நாட்டு தனவந்தர்கள், உள்நாட்டு நன்கொடையாளர்கள், சர்வதேச தனவந்தர்கள், சர்வதேச நன்கொடையாளர்கள், உள்நாட்டு அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள், சர்வதேச அரசு மற்றும் அரசு சாரா பல்வேறு அமைப்புகள் வெளிநாட்டு நன்கொடை உதவிகள், சர்வதேச பிராந்திய முகவராண்மைகள் ஊடாக நமது நாட்டு மக்களுக்கு அதிகபட்ச உதவி கிடைப்பதை உறுதி செய்யும் விடயத்தில் எமது கடமையையும் பங்கையும் நிறைவேற்றி வருகிறோம்.

இதுபோன்ற ஒரு நேரத்தில், நமது நாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைத் தளர்த்துமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டுக்கொள்கிறேன்.

நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்நேரத்தில், நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதும், நலன்புரி மற்றும் அபிவிருத்தி உதவிகள் மூலம் அவர்களின் நாளாந்த ஜீவனோபாயம், குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் நீடித்த வாழ்க்கையை வலுப்படுத்துவதும் இங்கு அவசியமான ஒன்றாக அமைந்து காணப்படுகின்றன.

ஆகையால், சர்வதேச நாணய நிதியம் நாட்டின் மீது விதித்துள்ள கடுமையான நிபந்தனைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தளர்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த அனர்த்தால் அழிந்து போன மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும், அனர்த்தத்தைச் சந்தித்துள்ள பிரதேசங்களை மீண்டும் அபிவிருத்தி செய்யவும் தேவையான உதவிகளை வழங்குமாறு உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களை நாம் கேட்டுக்கொள்கிறோம்.

இந்நேரத்தில், மேலும் மேலும் கடன்களைப் பெற்று நாட்டை கடன் பொறிக்குள் அடைப்பதற்குப் பதிலாக, நாட்டை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான உதவிகளைப் பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சர்வதேச சமூகத்திம் கோரியுள்ளார்.

நாட்டில் 91 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் 91 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், எதிர்க்கட்சியின் சகல உறுப்பினர்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு, இந்த பேரனர்த்தால் பாதிக்கப்பட்ட நாட்டைக் கட்டியெழுப்ப சர்வதேச ஆதரவுக்கான மாநாட்டைக் கூட்டுமாறு நான் அரசாங்கத்திடம் கோருகின்றேன்.

இந்த பேரனர்த்த சூழ்நிலையால் ஏற்பட்ட பேரழிவிலிருந்தும், நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்தும் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். கடன் பெற்று இதனைச் செய்ய முடியாது.

அதனை தாங்கும் நிலையில் நாடும் நாட்டு மக்களும் இல்லை. எனவே கடனை விடுத்து, உதவிகளைப் பெற்றுத் தாருங்கள்.

நமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பில் உலகின் கவனத்தை எமது பக்கம் ஈர்த்து, நமது நாட்டிற்கு நேர்மறையான, முற்போக்கான உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டான முன்னெடுப்பை ஆரம்பிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் தாம் தயார் என்றும், இதற்கு எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் பூரணமாகப் பெற்றுத் தருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உறுதியளித்துள்ளார்.  

அனர்த்த நிலைமையை கையாளும் விதம் தொடர்பில் விளக்கம்

அனர்த்த நிலைமையை கையாளும் விதம் தொடர்பில் விளக்கம்

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US